
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்
இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
ஷரியா முதலீடு...?
ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது.
வேகமாக வளர்ந்து வரும் துறை!
இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத் துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளன.
லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள் ஆண்டுக்கு 15 - 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள் 2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.
உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்...!
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன் திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹராம் ஆகும்.
இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான் தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள் ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
நிஃப்டி ஷரியா!
நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு செய்யப்படுகிறது?
தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப் பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன் நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ் அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக 'ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்' (ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில் சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!
ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள் கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.
1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி ருக்கக்கூடாது.
2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில் அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை கடைப் பிடிக்கின்றனர்.
3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும் உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க வேண்டும்.
5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும் வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும் இந்தக் குறியீடு தெரிவிக்கும்.
ஷரியா இ.டி.எஃப்.!
நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.
பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES) என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப், இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன் விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு மூலம்தான் வாங்க முடியும்.
ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!
டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட் என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58 கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது. இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.
டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில் முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட் 139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31. இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30, 2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5% -யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக் கொடுத்துள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் தவிர, நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6 ஃபில்டர்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
எல். அண்ட் டி,
பார்தி ஏர்டெல்,
ஹிந்துஸ்தான் யூனிலிவர்,
ஒ.என்.ஜி.சி.,
பி.ஹெச்.இ.எல்.,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,
என்.டி.பி.சி.,
டாடா பவர்.
மேற்கண்ட முதலீடுகளுடன், தங்கம்/வெள்ளி போன்றவற்றிலும், ரியல் எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!
குறிப்பு இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களையோ அல்லது பங்குகளையோ அவற்றின் செயல்பாட்டுத் திறனை வைத்துக் கொடுக்கவில்லை. மாறாக ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய இந்தியாவில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மட்டுமே தெரிவிக்க முனைந்துள்ளோம். முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களது முதலீட்டை மேற்கொள்ளவும்
(நாணயம் விகடன் (ஆகஸ்ட் 15, 2010) இதழில் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன். டைரக்டர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் அவர்கள் இஸ்லாமிய பங்கு முதலீடுகள் குறித்து எழுதிய கட்டுரையை நமது இணையத்தள வாசகர்களுக்கு நன்றியுடன் அளிக்கின்றோம்)Courtesy:Makkal Urimai
புதன், 20 ஜனவரி, 2010
புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா ?
புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா ?
தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் !
யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் ?
கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
பத்திரிகையாளர்கள்,
Ø எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் தங்கள் பத்திரிகையின் முன்பக்கம், நடுப்பக்கம், கடைசிப்பக்கத்தில் கவர்ச்சி படங்களை இட்டு காசாக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தொலைகாட்சியாளர்கள்,
Ø எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் சினிமா, சீரியல், தலுக்கு குலுக்கு நடணங்கள், மானாட மயிலாடப் போன்ற ( மயிர் கூச்செரியும்) இன்னும்பிற நிகழ்ச்சிகள் வரை ஆபாசங்களையும், அந்தரங்க சமாச்சாரங்களையும் அரங்கேற்றுவதற்கு கோடம்பாக்கம் வெறிச்சோடிப்போய் விட்டால் தங்களது தொலைகாட்சிகளை இயக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அழகிப் போட்டி நடத்தும் சேடிஷ்டுகள்.
Ø எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் அழகிப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் தேர்தெடுக்கப்படும் அழகி(?)களை விளம்பரங்களில் நடிக்கவைத்தும், அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சப்ளை செய்து கோடிகளை உண்டாக்க முடியாத நிலை ஏற்படும்.
நட்சத்திர ஹோட்டல் குபேரர்கள்,
Ø எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காக வருகை தரும் விஐபி, மற்றும் தொழில் அதிபர்களுக்கு மஸாஜ் செய்து விட்டும், பார்களில் ஊற்றிக் கொடுத்தும், பிரம்மாண்டமான அரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்வித்து கத்தை கத்தையாக கரன்சிகளை கரக்கச் செய்வதற்கு பெண்கள் கிடைக்கா விட்டால் நட்சத்திர அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும்.
அவ்வாறான ஒரு நிலை உருவானால் பெண்களை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களது கேளிக்கை நிருவனங்களை அவர்களது குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தூக்கி நிருத்த முன் வர மாட்டார்கள். இந்த சேடிஷ்டுகள் ஊரான் பெற்றப்பிள்ளைகளைக் கொண்டு தான் அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் கடைவிரித்து காசு பண்ணுவார்கள்.
அதனால் மேற்காணும் சதை வியாபாரிகளே அதிகபட்சம் பெண்களின் பாதுகாப்பு பர்தா சம்மந்தமான சர்ச்சைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகைவதைக் கண்டால் வீறு கொண்டெழுந்து அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
அதில் ஒன்று தான் சமீபத்திய விஜய் டிவி புர்கா அணிந்து பெண்கள் வெளியில் செல்வதை கொச்சைப் படுத்தும் விதமாக நடத்தவிருந்த நீயா ? நானா ? போட்டி சரியான தருணத்தில் தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவித்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
இன்னும் சில கடவுள் மறுப்பாளர்களும், இஸ்லாமிய விரோதிகளும் நடத்தும் ஊடகத்திலும், இனையத்திலும் பர்தா சம்மந்தமான சர்ச்சைகைள் எழும்போது இதுப்போன்ற போட்டோக்களை மட்டும் இட்டு மதவெறியையும், கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்தி குதூகலம் அடைவார்கள் ஹிஜாப் எங்கள் உரிமை எனறு வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருக்கிறது. இதுப் போன்ற போட்டோக்கள் எல்லாம் அவர்களுடைய மதவெறிப் பார்வையில் படாது உலகம் முழுவதிலும் முஸ்லிம் பெண்கள் இது மாதிரியே நடப்பதுப் போன்றும் சித்திரிப்பார்கள். குறுகிய வட்டத்திற்குள் முடங்கி கிடக்கும் குறுமதியாளர்கள்.
நடந்தது என்ன ?
ஃபிரான்ஸில் ஒருக் கல்லூரி நிர்வாகம் முகத்தை மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம் பெண்களுக்கு தடை விதித்தார்கள். இதே புர்கா அணிந்து கொண்டு வரக் கூடாது என்ற தடையை விதித்திருந்தால் இது போன்ற பல தடைகளை அதே ஃபிரான்ஸிலும், இன்னும் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டில் இயங்கும் சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் போராடி உடைத்தெறிந்திருக்கின்றன அதேப் போன்று இதையும் உடைத்தெறிய ஃப்ரான்ஸில் இயங்கும் முஸ்லீம் அமைப்புகள் போதுமானது.
பல சமுதாயத்தவர்களும் இணைந்துப் போராடி சுதந்திரம் பெற்ற இந்திய ஜனநாயக நாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதுமாதிரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மதம் சார்ந்த பிரச்சனைகள் எழும்போது அதில் நியாய, அநியாய அடிப்படையில் தங்களது ஊடகங்களில் பதிய வேண்டும், இல்லை என்றால் கோடம்பாக்கத்தையே உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
கற்பழிப்புக்கான காரணம் ?
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான காதல் அதிசயம் என்றான் சினிமாக் கவிஞன்.
கல் தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான கற்பழிப்பு அதிசயம் என்பதே உண்மை.
இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் 1929ல் எட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டமியிற்றினார்கள் எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களை கற்பழிப்பது குற்றமில்லை எனும் அளவுக்கு தொன்மை வாய்ந்தது இந்தியாவின் கற்பழிப்பு நிகழ்வுகள்.
சமீபத்தில் தலைநகர் டெல்லியை குலுக்கும் தொடர் கற்பழிப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனால் மற்ற மாநிலங்களில் கற்பழிப்புகள் இல்லை என்றோ, அல்லது குறைவு என்றோ கருதிடக்கூடாது. இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்தப் படுகிறாள் என்றும், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப் படுகிறாள் என்றும் போலீஸ் தகவல் அறிக்கைக் கூறுகிறது. பாராளுமன்றம் இயங்கும் தலைநகரில் லட்சனம் பாரீர் எனும் தொனியில் தலைப்புக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டது அவ்வளவு தான்.
மேல்படி அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.
மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா ?
புர்காவே பாதுகாப்பு என்பதற்கு இன்னும் ஆதாரங்கள்
ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். ( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )
மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதால் அழகலங்காரத்தை முதலில் தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவேச் செய்தன இறுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுக்கமான உடைகள் அணிந்து வருவதே சக ஆண் ஊழியர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அறிந்தவர்கள் உடம்பை மறைக்கும் புர்கா அணிந்து வர சட்டமியற்றினர்.
hவவி:ஃஃறறற.னiயெஅயடயச.உழஅஃறழசடன_னநவயடை.யளி?நெறள_னை'949ரூnஉயவ'ஐNடுரூயசஉhiஎந'1ரூளாழறகசழஅ'6ஃ29ஃ2008
புர்காவே பாதுகாப்பு !
சிறகடித்துப் பறக்கும் பருவத்தில் அதன் சிறகொடித்து பூட்டியக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பறவைப் போல் படித்துக் கொண்டிருக்க கூடிய 17 வயது பிஞ்சுப் பருவத்து இளம் மொட்டொன்று சமீபத்தில் காமுகன் ஒருவனால் கசக்கிப் பிழிந்து முதியோர் காப்பகத்தில் வீசி எறியப்பட்டதற்கு எது காரணம் ?
கீழ்காணுமாறு புர்கா அணிந்து கொண்டு கண்ணியமாக அமர்ந்து பாடம் படித்திருந்தால் காமுக ஆசிரியர்களின் பார்வை கண்ட இடங்களிலும் பட்டு இந்நிலை உருவாகி இருக்குமா ?
பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.
Ø பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று தினமனி கதிரில் (4-4-99ல்) பெருமூச்சு விட்டிருந்தார் ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.
ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது.
Ø 24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300
மேற்காணும் திருமறைக் குர்ஆனில் பெண்களுக்கு சொல்லப்பட்ட ரத்தின சுருக்கமான கட்டளைகளை அவர்கள் பேணிக் கொண்டால் கற்பழிப்புகள், மற்றும் கள்ளக்காதல்களின் வாசல் கதவுகள் நிரந்தரமாக இழுத்து தாழிடப்படும்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதுவே எங்களுக்கு பாதுகாப்பு அதனால் புர்கா அணிந்து கொண்டே வெளியில் செல்வோம், புர்கா அணிந்து கொண்டே கல்லூரிக்கு செல்வோம் எங்கள் உரிமையில் கை வைக்காதே என்று புர்கா அணியச் செய்வது முஸ்லீம் பெண்களின் மீது இழைக்கப்படும் அநீதி என்று ஓநாய்கள் அழுத பொழுது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் முஸ்லீம் பெண்கள்.
இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் கற்பழிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியாதக் காரணத்தால் இறுதியாக அத்வானி அவர்கள் கற்பழிப்புகளுக்கு ( இஸ்லாமிய ) மரண தண்டனையே சரியானத் தீர்வு என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கற்பழிப்புகள்.
கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக்கிய இஸ்லாம் கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.
பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு பாலருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்.
ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா ? அவர்கள் மனித இனமா ? என்ற ஆய்வை ஆணினம் மேற்கொண்ட பொழுது உனது ஆய்வை நிருத்திக்கொள் அவர்களும் உன்னைப் போன்ற மனித இனமே உன்னிலிருந்தே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றுக் கூறி அவர்களுடைய ஆய்விற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். 49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
படைப்பாளன் அல்லாஹ்வே என்பதற்கு அல்லாஹ்வின் வாக்குகள் அடங்கிய ஆண் பென் இரு பாலருக்கும் மத்தியில் பாரபட்சம் காட்டாத மேற்காணும் திருமறைக்குர்ஆனின்; வசன்ங்கள் மிகப் பெரிய ஆதாரம்.
5: 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் J.MOHAMED JINNAH
செவ்வாய், 12 ஜனவரி, 2010
குஜராத் தம்பதி போலி என்கெளண்டர்: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஞாயிறு, 10 ஜனவரி, 2010
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச பொறியியல், மருத்துவ படிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அவரது உரையில் இடம் பெற்ற கல்வி குறித்த முக்கிய அறிவிப்புகளாவன:
* உயர்நிலைபள்ளிகளை மேம்படுத்தி அனைவருக்கும் இடைநிலை கல்வி கிடைக்க ஆவண செய்யப்படும்.
* சமச்சீர் கல்வி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் பொறியியல் கலலூரிகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும், பல் மருத்துவ கல்லூரிகளிலும், வேளாண்மை கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும், சட்ட கல்லூரிகளிலும், ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லை என்றால், அந்த மாணவர்களின் தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிப்பதற்காக ஜாதி பாகுபாடின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
மேலும், திருச்சியில் ஐஐஎம், கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்க அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டியில் எம்.ஏ!
சென்னை ஐ.ஐ.டியில் இன்ஜினீயரிங் படிப்புகள் மட்டுமல்லாது, பொருளாதாரம், ஆங்கிலம் மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகிய படிப்புகளையும் தற்போது படிக்கலாம். இந்தப் பாடப் பிரிவுகளில் நடத்தப்படும் ஐந்தாண்டு எம்.ஏ., படிப்பில் ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். ப்ளஸ் டூ தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மே 2ம் தேதி கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும். ஜனவரி 21ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். டவுன்லோடு செய்த விண்ணப்பங்களை சென்னை ஐ.ஐ.டி., ஹெச்.எஸ்.இ.இ., தலைவர் முகவரிக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி சேர்ப்பிக்க வேண்டும்.
நன்றி: விகடன்
சிங்கப்பூர் இன்ஜினீயர் ஆக ஆசையா?
நன்றி:விகடன்
சனி, 9 ஜனவரி, 2010
மகிழ்வுடன் என்னை திருத்திக் கொள்கிறேன் - தமுமுக தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் கடிதம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம் வெளியிடும

உள்துறை அமைச்சரின் கடிதத்திற்கு தமுமுக சார்பாக பாராட்டும் நன்றியும் தெரிவித்து தமுமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக முன்னதாக பேரா.டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் விடுத்த அறிக்கையில் ஜிஹாத் குறித்த தவறான பொருள்படும் படி உள்துறை அமைச்சர் ஆற்றிய உரை நாட்டின் நடுநிலையாளர்களை உண்மையிலேயே அதிர்ச்சி கொள்ள வைத்தது.மதசார்பற்ற தேசிய பாரம்பரியத்தில் வந்த உள்துறை அமைச்சரா? இத்தகைய கருத்துகளை உதிர்த்தார் என அனைவரும் வியப்படைந்த வேளையில் தமுமுகவின் சார்பில் முஸ்pலிம்களின் மன உளைச்சலை அகற்றி தெளிவுபடுத்துமாறும் தாங்கள் கூறிய கருத்துக்களை திரும்பப்பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்யவேண்டும் என தமுமுக தலைவர் கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு இணங்க உள்துறை அமைச்சர் தமுமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில ஜிஹாத் என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பிரயோகிக்கப் பட்டதைப் போன்று தானும் பயன்படுத்தியதாகவும் அதனை திருத்தும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருந்தார்;. முஸ்லிம் சமுதாயத்தின் எந்த ஒரு மனிதரின் மார்க்க உணர்வுகளையும் புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை தனது கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததின் மூலம் தான் ஒரு நியாயவான் என்பதை நிரூபித்து இருப்பதாகவும் தமுமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த ஜனவரி 1ம் தேதி உள்துறை அமைச்சருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் ஜனவரி 8 அன்று பதில் அனுப்பினார். அவரது பதிலின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. அன்புள்ள திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்குஜனவரி 1, 2010 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு பக்தி நிறைந்த முஸ்லிம் என்ற அடிப்படையில் இஸ்லாத்தின் போதனைகளையும், ஜிஹாத் என்ற சொல்லின் உண்மையான பொருளையும் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. எனவே உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தின் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் அல்ல என்பதையும் நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் தீவிரவாத நடவடிக்கைகளையும் தீவிரவாதிகளையும் குறிப்பிடுவதற்காக பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. செய்தி ஊடகங்களும் இந்த சொல்லை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் குறுகிய படிப்பில் ஜிஹாத் என்ற சொல்லின் பொருள் நம்பிக்கையில்லாதோர் மீதான போர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அல்காயிதா, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். நவம்பர் 26, 2008ல் மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் இருந்து அவனை இயக்கிய ஒருவனுடன் நடத்திய பேச்சுகளின்; போதும் ஜிஹாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அப்துல் முத்தலிப் (விமானத்தை குண்டுவைத்து தாக்கும் நிலையில் இருந்தவன்) உடைய தந்தை, 'என்னால் அங்கீகரிக்க முடியாத ஜிஹாதிய இஸ்லாத்தின் வடிவத்தின் தாக்கத்திற்கு எனது சொந்த மகன் இழக்காகிவிட்டான்' என்று சொன்னாதாக தகவல்கள் வந்துள்ளன.நீங்கள் சுட்டிகாட்டியுள்ளது போல் பொதுவான பயன்பாட்டில் ஜிஹாதிற்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களைப் போல் நானும் பொதுவாக கூறப்படும் பொருளில் அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். நான் மகிழ்ச்சியுடன் என்னை திருத்திக் கொள்கிறேன். உங்கள் உண்மையுள்ள (ஒ-ம்) ப. சிதம்பரம் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கள், 4 ஜனவரி, 2010
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தான் என்ற மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்
உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.
இறைவனோ அவனது இறுதித்துôதர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்ம் ஒருவரை முஸ்ம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. அநியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்ம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
நன்றி: த.மு. மு.க.
தி.பண்டாரவாடை சகோதர்களுக்கு
இந்த புதிய முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த அன்பு சகோதரர் தி. பண்டராவாடை மெயின் ரோடு ஹாஜி. ஹபிப் முஹம்மது அவர்களின் மகனார் ஜனாப் .அம்ஜாத் அலி,துபாய் அவர்களுக்கு எனது நன்றியினை இதன் மூலம் தெரிவித்து கொள்வோதோடு நமது ஊர் சகோதரர்கள் நமது ஊரினை பற்றிய புதிய செய்திகளை எனக்கு தெரிவித்தால் அதனை பிரசுரிக்க உதவியாக இருக்கும் என அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன் அ. ஜாகிருதீன்.
