ஞாயிறு, 10 ஜனவரி, 2010

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச பொறியியல், மருத்துவ படிப்பு!

குடு‌‌ம்ப‌த்‌தி‌‌ன் மு‌த‌ல் ப‌ட்டதா‌ரி‌க்கு இலவச பொ‌றி‌யிய‌ல், மரு‌த்துவ படி‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக ஆளுனர் உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவரது உரையில் இடம் பெற்ற கல்வி குறித்த முக்கிய அறிவிப்புகளாவன:

* உயர்நிலைபள்ளிகளை மேம்படுத்தி அனைவருக்கும் இடைநிலை கல்வி கிடைக்க ஆவண செய்யப்படும்.

* சமச்சீர் கல்வி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் பொறியியல் கலலூரிகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும், பல் மருத்துவ கல்லூரிகளிலும், வேளாண்மை கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும், சட்ட கல்லூரிகளிலும், ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லை என்றால், அந்த மாணவர்களின் தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிப்பதற்காக ஜாதி பாகுபாடின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

மேலும், திருச்சியில் ஐஐஎம், கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்க அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக